அதிமுகவில் அதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை! திட்டவட்டமாக தெரிவித்த கேபி முனுசாமி!

0
152

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் அனைவரும் சசிகலா அதற்கு எதிராகவே இருக்கிறார்கள்.

இந்தநிலையில், சசிகலாவை மறுபடியும் கட்சியில் சேர்க்க கூடாது என்று ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் எடுத்திருக்கிறார்கள், இதுகுறித்து அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

சசிகலாவிற்கு உண்மையாகவே அதிமுக மீது பாசப் பற்று இருந்தால் அவர் ஜெயலலிதாவிடம் நானும் எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். அதனடிப்படையில் நடந்துகொள்ளவேண்டும். கட்சியை சிறப்பாக நடத்துங்கள் என்று தெரிவித்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையான சகோதரியாக சசிகலா இருப்பார் என தெரிவித்திருக்கிறார் கேபி முனுசாமி.

அதிமுக என்ற கட்சி எப்போதும் சாதி மற்றும் மத ரீதியாக செயல்படாது. தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய போது நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம், எதிர்க்கட்சியினர் எங்களை பாராட்டுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் செயல்பாட்டுக்கு வரும்போது எதிர்மாறாக செயல்பட்டு வருகிறார், ஆறுமாத கால திமுக ஆட்சியில் சொல்லிக் கொள்வதை போல ஒரு மணி நேரம் கூட நடைபெறவில்லை. இதனை எதிர்க்கட்சி ஆகிய நாங்களும் கவனித்து வருகிறோம். தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து உரையாடி போராட்டங்களில் ஈடுபடுவோம் தெரிவித்திருக்கிறார் கேபி முனுசாமி.

Previous articlePhonePe வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இனி சேவை கட்டணம்.!!
Next articleதீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!