இந்த வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!
கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இருந்தது.அப்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் விடுதியில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் ,மாணவர் சேர்க்கை ,சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம் ,பராமரிப்பு கட்டணம் என கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
இதனால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் சிறுபான்மை மாணவர்கள் அதிகளவு பயனடைந்தார்கள்.அந்த வகையில் இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் உள்ள இதர வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.