தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பற்றி, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.
2019 ஆம் ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது அப்படியே பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காட்டுத்தீ போல படு வேகமாக பரவ ஆரம்பித்தது. உயிர் பலிகளும் ஏற்பட்டன.
அதன் பின்னர் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் நாம் இரண்டாம் அலையிலிருந்து தப்பவில்லை.
முதல் அலையை விட சற்று தாக்கம் குறைவாகவே இருந்தாலும், உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்தன.
இப்போது தமிழகம் முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் வெளிநாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி இருக்கிறது.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
தமிழகத்தின் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாவது அலைக்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் கூறியுள்ளார்.
அதற்காக மூன்றாவது அலை ஏற்படாது எனவும் கூற முடியாது, வெளிநாடுகளில் ஏற்கனவே மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக கூறினார்.
மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருப்பது மிக அவசியம்.