நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்!

Photo of author

By Hasini

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்!

பெண்கள் மற்றவர்களை நம்பும் வரை அவர்களுக்கு துயரம் மட்டுமே காத்திருக்கும் என்பதை நமக்கு பல சம்பவங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் நமக்கு அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே உள்ளது.

எனவே பெண்களே யாரையும் எளிதில் நம்ப கூடாது என்பதை கருத்தில் கொண்டு கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்புவதிலும், பழகுவதிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம், ஜெஹனாபாத் மாவட்டதை சேர்ந்த பிரகாஷ் சிங் இவர் நான் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறேன் என கூறி இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இளம்பெண்ணுக்கு வாக்குறுதி அளித்து காதலித்து வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளனர் ஒரு கட்டத்தில் அப்பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறி பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளார் அந்த ராணுவ வீரர். இதையடுத்து ராணுவ வீரரான பிரகாசுக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை அறிந்த அந்த இளம்பெண் பிரகாஷ் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதையடுத்து தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார் அந்த ராணுவ வீரர்.

இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அப்பெண் உடனடியாக 112 என்கின்ற காவல்துறையின் உதவி எண்ணுக்கு அழைத்து தன்னை பிரகாஷ் சிங் என்ற ராணுவ வீரர் காதலித்து ஏமாற்றியதாக கூறி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து ஒருகட்டத்தில் பிரகாஷின் குடும்பத்தினர் இளம் பெண்ணின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ராணுவ வீரர் இதுவரை அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி தற்போது அந்த இளம்பெண் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.