மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்!
பெண்கள் பல துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். சில துறைகளில் முதல் இடத்திலும் அவர்கள் பதவி வகிக்கிறார்கள். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும். ஏனெனில் திருமணம் செய்து கொள்ளும் போதே கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என பலதரப்பட்ட கருத்துக்கள் பல உறவுகள் மூலம் அவளுக்குள் திணிக்கப்படுகின்றன.
இந்த கருத்துக்களால் அந்த பெண் தட்டு தடுமாறி போய் விடுகிறாள். புகுந்த வீட்டில் உள்ள உறவுகள் முதல் என அனைத்து விஷயங்களுமே பெண்களுக்கு பல மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அதிலும் சில ஆண்கள் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும். நான் சொல்வதை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று சர்வாதிகாரிகள் ஆக பெண்களை கொடுமை செய்கிறார்கள்.
தற்போது பெண்கள் மிடுக்காக படித்து, வெளி உலகம் சென்று தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே வாங்கிக் கொண்டாலும், மிகப் பல இடங்களில் பெண்கள் ஆண்களால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய மதிப்பு என்றுமே, எந்த இடத்திலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் நமது சமுதாயம் அப்படித்தான் உள்ளது. ஆண்களுக்கு என்றால் ஒரு நியாயம் என்றும், பெண்களுக்கு என்றால் ஒரு நியாயம் என்று தான் சிறுவயதில் இருந்தே நமது பெற்றோர் மூலம் நமது மூளைகள் சலவை செய்யப் படுகின்றன. தற்போது பெண்களின் கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருகிறது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைவதன் மூலம் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றவர்களாக ஆகலாம் என்ற கணக்கு பலருக்கு உள்ளது.
ஆனால் அது முற்றிலும் தவறு. இன்னமும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பல கிராமங்களிலும், பலரது வீடுகளிலும் குடும்ப வன்முறைகளும், பல தாக்குதல்களுக்கும் ஆளாகிதான் வருகிறார்கள். இதை தற்போதைய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 18 மாநிலங்களிலும் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் கணவன் மனைவியை அடிப்பது நியாயமா? என்ற கேள்வி பலரது முன்னிலையில் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆய்வுகளின் முடிவுகள் இந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அசாம், ஆந்திரா, பீகார், கோவா, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்த விடைகளின் அடிப்படையில் மனைவி கணவனிடம் சொல்லாமல் வெளியேறினாலோ, வீட்டையோ புறக்கணித்து, குழந்தைகளை வேண்டாம் என்று நினைத்தாலோ, கணவனுடன் மனைவி சண்டையிட்டாலும், கணவனுடன் உடலுறவு கொள்வதை மறுத்தாலோ, உணவு சமைத்துப் பரிமாற வில்லை என்றாலும், மேலும் மனைவியை துரோகி என்று கணவன் சந்தேகப்பட்டால் கூட மனைவியை அடிப்பது போன்ற காரணங்கள் எல்லாம் பட்டியலிடப் பட்டுள்ளது என்று ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக மாமியார்களை மதிக்கவில்லை என்றால் கூட அது ஒரு அந்த பதிவில் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதில் மொத்தம் 83.8 சதவிகித பெண்கள் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதில் தவறு இல்லை என கூறி தெலுங்கானாவில் உள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் 14.8 சதவிகிதம் என குறைத்து கூறியுள்ளனர்.
ஆண்கள் கூறிய கூற்றுப்படி 81.9 சதவிகிதம் கர்நாடகா முன்னணியில் உள்ளது. அதே போல் இமாச்சல பிரதேசத்தில் 14.2 சதவிகிதம் பேர் இது நியாயமானது என்று கூறியுள்ளனர். இதே போல் ஆந்திரா (83.6%), கர்நாடகா (76.7%), மணிப்பூர் (65.7%), கேரளா (65.9%) ஆகிய மாநிலங்களில் குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக பெண்களே அதிக சதவீதத்தைக் கூறி உள்ளனர்.