தனியாக ஆபாச வீடியோ பார்ப்பதில் தவறு கிடையாது!!! கேரளா உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு!!!

0
57
#image_title

தனியாக ஆபாச வீடியோ பார்ப்பதில் தவறு கிடையாது!!! கேரளா உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு!!!

ஒருவர் தனியாக ஆபாச படம் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று கேரளா உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா இடம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு பாலத்தின் அடியில் அமர்ந்து ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அந்த இளைஞர் மீது ஆபாசம் குறித்த ஐ.பி.சி பிரிவு 292ன் படி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கள் செய்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹிகிருஷ்ணன்(KunhiKrishnan) அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் ஒருவர் தனியாக ஆபாச படம் பார்ப்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்” என்று தீர்ப்பளித்து ஆபாச படம் பார்த்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார்.

நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் அவர்கள் அளித்த தீர்ப்பில் “ஒரு நபர் தனிப்பட்ட நேரத்தில் தனிப்பட்ட விருப்பத்தில் மற்றவர்களுக்கு காட்டாமல் ஆபாசபடம் பார்ப்பது குற்றம் ஆகுமா என்பது இங்கு தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி ஆகும். ஒருவர் தனியாக ஆபாச படம் பார்ப்பது குற்றமாகும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி அறிவிக்க முடியாது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் குறுக்கீடு செய்வது அவருடைய தனியுரிமையில் குறுக்கீடு செய்வதற்கு சமம்.

அதைப் போலவே ஒருவர் தனியாக செல்போன் மூலமாக ஆபாச படம் பார்ப்பது ஐ.பி.சி 292 பிரிவின் படி குற்றமான செயலாகாது. ஆனால் அதுவே அந்த ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் பரப்புவது, விற்பனை செய்வது, பகிரங்கமாக காட்சிபடுத்த முயற்சி செய்வது ஐபிசி பிரிவு 292ன் படி மாபெரும் குற்றமாகும். செல்போன் போன்றவைகளின் மூலம் ஏற்படுகின்ற ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.