ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

0
56
#image_title

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கேப்டன்,புரட்சிகலைஞர் என்று ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்.தனது நீளமா வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரின் ஆரம்ப கால திரை வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்துள்ளது.இவர் திரைக்கு வராமல் இருப்பதை தடுக்க பலர் முட்டுக்கட்டையாக இருந்தனர்.இதில் அதிர்ச்சி என்னவென்றால் விஜயகாந்த் திரையில் தோன்றுவதை தடுத்த முதல் நபர் நாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினி அவர்கள் தான்.

ஆரம்ப காலத்தில் பட வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருந்த விஜகாந்த் அவர்களுக்கு ஒரு முக்கிய புள்ளி மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்த விஜயகாந்த் அவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.கிடைத்த வாய்ப்பை வைத்து திரையுலகில் நல்ல இடத்திற்கு வந்து விட வேண்டுமென்று பல கனவுகளுடன் இருந்தார்.ஏனென்றால் அவர் நடிப்பது ரஜினி காந்த் உடன் என்பது தான்.ரஜினிக்கு தம்பியாக நடிக்க 101 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு மதுரைக்கு படப்பிடிப்பிற்காக அனுப்பப் பட்டார் விஜயகாந்த்.ஆனால் அங்கு சென்றதும் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.படத்தின் இயக்குநர் விஜயகாந்த்தை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்.காரணம் ரஜினி சாயல் விஜயகாந்த் அவர்களுக்கு இருந்தது தான்.ஹேர் ஸ்டைல்,கலர்,நடிப்பு அனைத்தும் ரஜினி போல இருந்ததால் இவரை ரஜினியுடன் நடிக்க வைத்தால் மிகவும் பேமஸ் ஆகிடுவார்.படத்தில் ரஜினியை விட இவரை தான் அனைவரும் பார்த்து ரசிப்பார்கள் என்று எண்ணிய இயக்குநர் விஜயகாந்திடம் உனக்கு தமிழ் சரியாக வர வில்லை நீ இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.இது விஜயகாந்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ரஜினிக்கு தம்பியாக விஜயகாந்த் நடிக்க இருந்த ரோலில் விஜயகுமாரை நடிக்க வைத்த படம் தான் “என் கேள்விக்கு என்ன பதில்”.இப்படத்தில் நடித்தால் ரஜினியை விட பேமஸ் ஆகிவிடுவாரோ என்று எண்ணி ஒதுக்கப்பட்ட விஜயகாந்த் தான் பின்னாளில் ரஜினிக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கடின உழைப்பால் திரைத்துறையில் முன்னணி நடிகராக மாறினார்.