அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி

Photo of author

By Parthipan K

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி

Parthipan K

Updated on:

More than Rs.1000 electricity bill, electricity board new order!

அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி

தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் விஐபிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பாராமரிப்புக்காகவோ அல்லது அவசர காலங்கள் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மின்தடை இருக்கக்கூடாது என்று மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்சாரவாரிய தலைமை பொறியாளர்களுக்கும் மின்சாரவாரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதை சில மின் பகிர்மான வட்டாரங்களில் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்ததந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவரை தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட அந்ததந்த மாவட்ட தலைமை பொறியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதுபோல் துணைமின் நிலையங்களிலும் போதிய பணியாளர்கள் இருபப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மின்சாரவாரிய தலைமை பொறியாளர்கள் பணிகளுக்கான அட்டவணையை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும், முக்கியமாக அனைத்து நாட்களிலும் சென்னைக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும் இதனை மீறும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது துறை ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.