கட்சி கொடிகள் எதுவும் இருக்க கூடாது.. உடனே எடுங்கள்!! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

0
2
There should not be any party flags.. Take them immediately!! Action order by the High Court!!
There should not be any party flags.. Take them immediately!! Action order by the High Court!!

Madurai High Court: நெடுஞ்சாலைகள் எனத் தொடங்கி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சி மற்றும் சாதி சார்ந்த கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருப்பதை உடனடியாக அகற்றும் படி உயர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பம் பொது இடங்களான மாநில நெடுஞ்சாலை என தொடங்கி பல இடங்களில் வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு சட்ட ஒழுங்கு சீர்கேடும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி இரு கட்சியை சேர்ந்தவர்களுக்கிடையே மோதல் உண்டாகுகிறது.இதனை தடுக்கவே தற்பொழுது உயர்நீதிமன்றம் இவ்வாறான உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

முதலாவதாக அதிமுக நிர்வாக்கு ஒருவர் விளாங்குடியில் கட்சி கொடி கம்பம் அமைக்க மனு அளித்திருந்தார். அவ்வாறு அளித்த மனுவின் பெயரில் தான் இவ்வாறன உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. மேற்கொண்டு கொடிக்கம்பம் அமைக்க வேண்டும் என்றாலும் அவரவர்குறிய சொந்த இடத்தில் இடையூறு ஏற்படாத வகையில் அமைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். மேற்கொண்டு இது குறித்த விதிமுறைகளை முறைப்படி தயார் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி பொது இடங்கள் நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற 12 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளனர். அத்தோடு குறித்த கால அவகாசத்தில் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Previous article“பொங்கல் பரிசு+மகளிர் உரிமைத்தொகை” ரெட்டிப்பு மகிழ்ச்சி.. மார்ச் மாதம் வெளிவரப்போகும் சூப்பர் அறிவிப்பு!!
Next articleமத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!