தமிழகத்தில் ஒரு மதுக்கடைகள் கூட இருக்க கூடாது!! TVK தலைவர் விஜய் மாற்று திட்டம்!!

Photo of author

By Vinoth

கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக மாநாட்டினை வெற்றி பெற செய்தனர். மேலும் விஜய் அவர்கள் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேசி இருந்தார்.

தவெக கட்சியின்  கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரை இருந்தது. விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு ஆதரவு என பல விமர்சனங்கள் அரசியல் கட்சி தலைவர்களால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் டிசம்பர்-27 விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் நேற்று TVK செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் மொத்தம் 26 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விஜய் அவர்கள் அழுத்தமாக கூறியது ஓன்று மதுக்கடை மூலம் வரும் வருமானத்தை விட கூடுதல் வருவாய் கிடைக்கும் மாற்று திட்டத்தை செய்யல்ப்படுத்தலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் இந்த மகளிர் உரிமைத்தொகை, பரிசுத்தொகை போன்ற இலவச திட்டக்களை அறிவித்து விட்டு அதற்க்கு வருவாய்க்கு மதுக்கடை திறப்பதா என்று கேள்வி எழுப்பினர் தவெகா தலைவர் விஜய்.