வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவான காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
விடுமுறை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த மாதம் ஜனவரி இரண்டாம் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது தான் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்தான்.
அந்த திருவிழாவானது கடந்த இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விழாவிற்கு புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா இன்று கொண்டாடப்பட இருப்பதினால் புதுச்சேரியில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.