வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டி வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதால், 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தின் வடக்கு பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் இன்று ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை செய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகும் எனவும், கூறப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 10 cm மழை பதிவாகியுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.