பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
233
Reservation for women! Action order of the Supreme Court!
Reservation for women! Action order of the Supreme Court!

பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முப்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் தொடங்கப்பட்டது.இந்த சட்டப் பிரிவின்கீழ் முப்பது சதவீத இடங்கள் பெண்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் முப்பது சதவீதத்தை பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு அதன்பிறகு சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றுவது  தீமையானது எனவும் குறிப்பிட்டார்கள்.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது .இதுபோன்ற நடைமுறைபடி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறை அல்ல. மேலும் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெரும் உரிமையை மறுக்க முடியாது. அதனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி முதலில் பொதுப்பிரிவையும் பிறகு சமூகரீதியான இடஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ அந்த அனைத்து இடங்களையும் பெண்கள் நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இந்த தீர்ப்பை ஏற்றுகொண்டு இனி வரும் தேர்வுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.

Previous articleஇந்த 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!
Next articleமுதலமைச்சர் பங்கேற்ற விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள்! இறுதியாக என்ன நடந்தது தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here