அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

Photo of author

By Sakthi

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

Sakthi

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து இருப்பதாலும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி ஆரம்பமான நிலையில் தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.