புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
165
New education policy soon! The announcement made by the Union Minister!
New education policy soon! The announcement made by the Union Minister!

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்  ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்  திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது.

மேலும் தமிழக அரசு புதிய தேசிய கொள்கையை எதிர்ப்பதாக மக்களிடம் தெரிவித்திருந்தது.ஆனால் இதுவரை நேரடியாகவோ ,எழுத்துப்பூர்வமாகவோ மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை.தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பித்து வருகின்றனர்.

மேலும் புதிய கல்விக் கொள்கை விரைவில் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசு அதற்கான அறிக்கைகளை சம்கர்பித்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த மரியாதையையும் ,அக்கறையும் கொண்டுள்ளது.மத்திய அரசின் திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.அதற்கு தேவையான நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனால் தமிழக மக்களிடையே பாஜக மீதான ஆதரவு பெருகி வருகின்றது.இந்த ஆதரவின் மூலம் வரும் 2024 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் குறைந்தபட்சம் 20இடங்களில் பாஜக வெற்றி வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K