இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!

0
160
#image_title

இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் சில தினங்களுக்கு முன் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Previous articleசெங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!
Next articleதிமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!