தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் சாப்பிட்டேற குறைய ஒரு மாத காலமாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்படவிருக்கும் தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களுக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.