இந்த 5 ராசிகள் தான் அதிகளவில் இரு தாரம் கொண்டவர்கள்!! அதிலிருந்து விடுபட எளிய வழி!!

Photo of author

By Rupa

ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல் மறு திருமணம் செய்யக்கூடிய நிலை ஏற்படும் அதற்கு இருதார தோஷம் அல்லது இருதார யோகம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதற்கு ஜோதிட காரணங்களாக ஏழாம் அதிபதியும், ஏழாம் இடம் பலவீனமாக இருந்து பதினோராம் இடம் பலம் பெற்று இருந்தால் இருதார தோஷம் உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஜென்ம லக்னத்தின் அடிப்படையில் இரண்டு தார அமைப்புகள் உள்ள ராசிகளாக ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை கூறுகின்றனர். இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் அவர்களது சூழ்நிலை, வாழ்க்கை மற்றும் மன நிம்மதிக்காக இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இரு மனம் ஆகாமல் தடுப்பதற்கு என சில பரிகாரங்கள் உள்ளன அவற்றை பின்பற்றினால் இருதார தோசத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது

பரிகாரங்கள்: ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக திருவுருவப்படத்தை வைத்து தினமும் வழிபடுவதால் இருதார தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
திருச்செங்கோட்டில் அமைந்திருக்கும் அர்த்தநாதீஸ்வரர் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்று வருவதும், அங்குள்ள சிவசக்தியின் படத்தை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்வதும் நல்லது என்றும் கூறப்படுகிறது.

திருமலைவேங்கடவன் ஸ்ரீ அடிவாச பெருமானை ஆண்டுதோறும் சென்று வழிபடுவது நன்மை தரும். மேற்கூறிய கோவில்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ சென்று வர வேண்டும். அவ்வாறு சென்று வந்தால் இருதார தோஷம் நிவர்த்தி அடைவதுடன், தோஷத்தில் இருந்து விலகி வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் பெறலாம்.