மனிதர்களின் இறப்பு மற்றும் பிறப்பு மற்றும் மறுபிறவி குறித்து கருட புராணம் விளக்குகிறது.பொய் பேசுபவர்கள்,பாவம் செய்பவர்களை இந்த கருட புராணம் அடையாளம் காட்டும் என்று சொல்லப்படுகிறது.இது தவிர மருத்துவம்,வானியல் பற்றியும் இது விளக்குகிறது.இந்த கருட புராணம் 18 மகாபுராணங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
இந்த கருட புராணத்தில் அனைத்து கடவுளை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கருட புராணத்தின் படி பொய் சொல்பவர்கள் மிகவும் கெட்டவர்களாக பார்க்கப்படுகிறது.இவர்கள் அவர்களுக்கே உண்மையாக இருக்க மாட்டார்கள்.அனைவரையும் தவறாக வழிநடத்துவார்கள் என்று கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கருட புராணம் நம் மரணம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிடுகிறது.நீங்கள் செய்யும் கர்மவினைகள் மற்றும் பாவங்களை பொறுத்து உங்கள் மரணம் கொடூரமாக இருக்கும் என்பதை கருட புராணம் சுட்டிக்காட்டுகிறது.
பொய் சொல்வதை தவிர்த்தால் உங்களுக்கு வலி இல்லா மரணம் நிகழும்.யாருக்கு கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு வலி இல்லாத மரணம் நிகழும்.பொய் கூறுபவர்கள்,இழிவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,திமிர் பிடித்தவர்கள்,அடுத்தவரை மதித்து வாழாதவர்கள்
வேதனையான மரணத்தை தழுவுவார்கள் என்று கருட புராணம் தெரிவிக்கிறது.
கொலை,கற்பழிப்பு,கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கொடுமையான மரணத்தை சந்திப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.
மரணம் தங்களை நெருங்குகிறது என்பதற்கான அறிகுறிகள்:
வாசனை மற்றும் தொடு உணர்வு இழந்தால் மரணம் உங்களை தழுவுகிறது என்று அர்த்தம்.ஒருவர் கண்ணாடி,தண்ணீர்,எண்ணெய் உள்ளிட்டவற்றில் தன் நிழல் சிதைந்தபடி இருப்பதை பார்த்தால் அவருக்கு மரணம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.ஒரு நபர் சூரியன்,சந்திர,நட்சத்திரம் போன்றவற்றை பார்க்க முடியாவிட்டால் அவருக்கு மரணம் நெருங்குகிறது என்று கருட புராணம் கூறுகிறது.