இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷ ராசிகாரர்களே வெற்றிமயமான புதிய வேலைகள் கிடைக்கும் நன்னாள்.எதிர்பார்த்த பணவரவுகள் வரும்.புதிய முற்சிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனம் தேவை.உடல்நலத்தில் சிறிதளவு கவனம் தேவை.சிவப்பு நிற ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசிகாரர்களே அதிக தானம் தருமங்களை செய்யுங்கள்.இதனால் உங்களிடம் நெருங்கி வரும் தீமை அகன்று விடும்.இன்று உங்களது வேலையில் பணி பளு அதிகமாக இருக்கும்.நன்மை பயக்கும் தகவல்கள் உங்களை தேடி வரும் நன்னாள்.

மிதுனம்:

மிதுன ராசிகாரர்களே இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம்.புதிய வேலையில் ஈடுபடாதிர்கள்.யாருக்கும் கடன் உதவி மற்றும் ஜாமீன் கையெழுத்து போடாதிர்கள்.இன்று உங்களுக்கு மிகுந்த அளவு கவனம் தேவை.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்:

கடக ராசிகாரர்களே இன்று நீங்கள் தொட்ட காரியம் கைக்கூடும்.இன்று உங்களுக்கு பணவரவுகள் அதிக அளவில் காணப்படும்.இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவிர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிகாரர்களே இன்று உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் நடக்க இருக்கும்.அரசியலில் உள்ளவர்களுக்கு அதிக நன்மையை ஏற்படுத்தி தரும் நன்னாள்.வரவும் செலவும் உங்களுக்கு சம நிலையிலேயே இருக்கும்.உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசிகார்களே இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்.உங்கள் தொழிலில் அதிக அளவு முன்னேற்றம் அடைவீர்கள்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும்.உங்கள் சொந்தங்களிடம் பேசும் போது மிகுந்த கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசிகாரர்களே இன்று நீங்கள் எண்ணிய எண்ணம் நிறைவேறும் நாள்.உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் மத்தியில் உங்கள் மேல் அதிக மரியாதை ஏற்படும்.இன்று உங்களுக்கு புகழ் மாலை கிடைக்கும்.அதுமட்டும்மல்லாது  உங்களுக்கு தனம் லாபம் பெருகும்.

விருச்சகம்:

விருச்சக ராசிகாரர்களே புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனம் தேவை.அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை கொடுக்கல் வாங்கல் கூடாது.பிறரது அந்தரங்க விஷயங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசிகாரர்களே உங்களுக்கு இன்று தனம் பெருகும் நன்னாள்.அரசு வழி காரியங்கள் நினைத்தது போல் நடக்கும்.இன்று உங்களுக்கு மிகுந்த நன்மையை பயக்கும்.

மகரம்:

மகர ராசிகாரர்களே நீங்கள் உங்களின் உடல் நலத்தில் அதிக கவனத்தை மேற்கொள்ள வேண்டும்.பிரிந்த உறவுகள் மீண்டும் சேரும் வாய்புகள் அதிக அளவில் உள்ளது.எண்ணிய காரியங்கள் நிறைவேற கடவுளின் வழிபாடு மிகவும் அவசியம்.

கும்பம்:

கும்ப ராசிகாரர்களே உங்களுக்கு புதிய வகை மாற்றங்கள் ஏற்பட வாய்புகள் அதிக அளவில் உள்ளது.புதிய வேலை மாற்றங்கள் ஏற்படும் நன்னாள்.கடன்களிலிருந்து விடுபடக்கூடிய நாளாகவும் அமையும்.

மீனம்:

மீன ராசிகாரர்களே மனம் மகிழ்ச்சி மற்றும் உற்ச்சாகத்துடன் காணப்படுவிர்கள்.நீங்கள் அதிக அளவு தர்ம காரியங்களில் ஈடுபடுவிர்கள்.புதிய தொழிலில் வெற்றியை காண்பீர்கள்.