இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.
இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என கூறப்பட்டிருந்தது.
அதனால் இன்று தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வரும் வியாழன்கிழமை (08.12.22) ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (09.12.22) தமிழ்நாடு .புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.