இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
பொங்கல் பெருவிழா தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. நமக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை கடவுளாக நினைத்து வணங்கும் நன்னாள். தமிழர்கள் தைத்திருநாள் அன்று புத்தாடைகள் அணிந்து கோலாகலமாக சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குவார். அதுமட்டுமின்றி அறுவடைப் பண்டிகை எனவும் இதனை அழைப்பது வழக்கம்.அதனை அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று கொண்டாடப்படுகிறது.
தமிழன் வீரனின் காட்டும் விதமாக இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு புத்தாடைகள் கொடுப்பது பொங்கல் பரிசாக வழங்குவது அத்துடன் பொங்கல் பரிசாக பணம் வழங்குவது என்பதை கொடுப்பர். ஆனால் இம்முறை திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டுமே பரிசாக வழங்கினார். எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழக மக்கள் சற்று அதிருப்தியடைந்து காணப்பட்டனர். அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பும் தரமானதாக இல்லை.
அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் புளியுடன் பல்லி இறந்த நிலையில் கிடந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடக்கும் வேளையில் ஒரு பக்கம் மக்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வேண்டி புத்தாடைகள் எடுப்பது, பூக்கள் வாங்குவது என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கேரளாவில் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகப்படியானோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கும்படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பிணராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதினார். கேரள முதல்வர் அதனை ஏற்று கேரளாவின் கொல்லம், இடுக்கி வயநாடு ,பத்தினம்திட்டா ,திருவனந்தபுரம் ,பாலக்காடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் சனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கூறி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. இந்த 14 மாவட்டங்களில் இந்த 6 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள எட்டு மாவட்டங்களிலும் வழக்கம்போல் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அதே போல மீதமுள்ள 8 மாவட்டங்களுக்கும் பொங்கல் அரசு விடுமுறை கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.