சருமத்தில் காணப்படும் மருக்களை வலி இல்லாமல் வேரோடு அகற்ற இந்த வழிகள் உதவும்!!

உடல் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற பலரும் பல முயற்சிகளை கையில் எடுக்கின்றனர்.ஆனால் அவற்றை நிரந்தரமாக நீக்கும் வழிகள் என்னவென்று தெரியாமல் இருக்கின்றனர்.

நமது உடலில் கை,கால்,கழுத்து,முதுகு,முகம்,இடுப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மருக்கள் உள்ளது.நீண்ட காலம் மருக்களை நீக்க போராடுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை செய்து அவற்றை நீக்கலாம்.

மருக்களை அகற்ற உதவும் எளிய வீட்டு வைத்தியம்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)காட்டன் பஞ்சு

முதலில் ஒரு காட்டன் பஞ்சை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி மருக்கள் மீது வைத்து தடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சில தினங்களில் மருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும்.

1)பூண்டு பேஸ்ட்

சிறிதளவு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை வறண்டு உதிர்ந்துவிடும்.

1)உருளைக்கிழங்கு
2)சோடா உப்பு

ஒரு துண்டு உருளைக்கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு சோடா உப்பு கலந்து மருக்கள் மீது பூசினால் அவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

1)ஆமணக்கு ஆயில்
2)ஆப்ப சோடா

கிண்ணம் ஒன்றில் 10 மில்லி ஆமணக்கு ஆயில் ஊற்றி கால் தேக்கரண்டி ஆப்ப சோடா சேர்த்து கரையும் வரை மிக்ஸ் செய்யவும்.

பிறகு இதை மருக்கள் மீது அப்ளை செய்து நன்றாக காயவிட்டால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

1)வாழைப்பழத் தோல்
2)லெமன் சாறு

ஒரு வாழைப்பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி லெமன் சாறு பிழிந்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

1)அன்னாசி சாறு

இரண்டு தேக்கரண்டி அளவு அன்னாசி பழச்சாறு தயாரித்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை வலியில்லாமல் உதிர்ந்துவிடும்.அதேபோல் தோல் நீக்கிய இஞ்சியை இடித்து சாறு எடுத்து மருக்கள் மீது பூசி வந்தால் அவை எளிதில் உதிரும்.