திருமணமான புதியதில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கின்ற அன்பு பிணைப்பு குழந்தை பெற்ற பிறகு குறைந்துவிடுகிறது.குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ப்ரேக் ஏற்படுவது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.
குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு புதிய பொறுப்புகள் வருகிறது.இருவரின் வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.கணவன் மனைவிக்கு பொருளாதார ரீதியான தேவை அதிகரிக்கின்றது.குழந்தை பிறப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறந்த பிறகு என்று தம்பதிகள் வேறுபட்ட வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றனர்.
குழந்தை பெற்ற பின்னர் கணவன்,மனைவி தங்கள் பொறுப்பை உணர்ந்து வாழ்க்கையை நகர்த்தினால் உறவில் எந்தஒரு இடைவெளியும் ஏற்படாது.பிரசவத்திற்கு பிறகு பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் ஆண்கள் பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.ஆண் மற்றும் பெண் மனநிலை வேறுபட்டு இருப்பதால் சண்டை,மனக்கசப்பு போன்ற விஷயங்கள் ஏற்படும்.குழந்தை பெற்ற பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்க நிச்சயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பெண் மட்டும்தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் இருந்து ஆண்கள் விடுபட வேண்டும்.
பிரசவித்த பெண்களுக்கு நிச்சயம் எமோஷனல் சப்போர்ட் தேவைப்படுகிறது.குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம்,மனச் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.பெண்களின் தூக்கச் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.இதன் காரணமாக உடல் பருமன்,மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
மனைவிக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கணவன் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.இருவரும் தங்கள் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும்.அதேபோல் பொருளாதார பிரச்சனைக்கு இருவரும் சேர்ந்து சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.