ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களது குடும்ப முன்னேற்றத்திற்காக தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் அந்த பணம் கையில் நிற்கவே மாட்டேங்குது, ஏதேனும் ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது, ஏன் தான் இவ்வாறு இருக்கிறதோ! என பலரும் நம் வாழ்க்கையில் புலம்பி இருப்போம். நமது வீடுகளில் நாம் வைத்துள்ள ஒரு சில பொருட்கள் பணவிரயத்தை ஏற்படுத்தும். அந்தப் பொருட்கள் எவை எவை என்பது குறித்து காண்போம்.
நமது வீட்டில் நாம் வைத்திருக்கக் கூடிய பழைய செருப்பு நமது வீட்டின் பண வரவை தடுக்கும். நமது மனதிற்கு பிடித்தமானவர் கொடுத்த பரிசு அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த செருப்பு என்பதற்காக அந்த செருப்பு பழையதாக ஆனாலும், பத்தாமல் போனாலும் அதனை தூக்கி எறியாமல் நமது வீட்டிலேயே வைத்திருப்போம். அவ்வாறு இருக்கக்கூடிய பழைய செருப்பு அல்லது பிஞ்ச செருப்பினை நமது வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
அதேபோன்று இரவு தூங்குவதற்கு முன்பு நமது நிலை வாசலுக்கு நேராக செருப்பு இல்லாதவாறு ஓரமாக எடுத்து வைத்துவிட்டு படுக்க வேண்டும். ஏனென்றால் இரவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுள் வருகை தருவார் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
நமது வீட்டினை சுத்தம் செய்யக்கூடிய துடைப்பம் மிகவும் தேய்ந்து இருந்தாலும் கூட அதனை பயன்படுத்தி வருவோம் அல்லது வீட்டில் எங்கேனும் ஒரு மூலையில் சேர்த்து வைத்திருப்போம். அவ்வாறு தேய்ந்த மற்றும் பழைய துடைப்பத்தினை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
கடிகாரம் என்பதை நாம் இப்பொழுதெல்லாம் ஒரு அறையில் மட்டும் மாட்டுவதில்லை. சமையலறை, படுக்கையறை என அனைத்து அறையிலும் கடிகாரத்தை மாட்டி வைத்திருப்போம். அதில் ஏதேனும் ஒரு கடிகாரம் பழுதாகி விட்டது என்றால் அதனை சரி செய்யாமல் பிறகு சரி பார்த்துக் கொள்ளலாம் என அப்படியே விட்டு வைத்திருப்போம். அவ்வாறு ஓடாத கடிகாரத்தை வீட்டில் நீண்ட நாட்களாக மாட்டி வைத்திருக்க கூடாது.
கிழிஞ்ச துணிகள் மற்றும் பத்தாத துணிகளை அதிகம் வீட்டில் சேர்த்து வைக்கக் கூடாது. பழைய துணிகள் எதற்கேனும் பயன்படுத்த உதவும் என நிறைய துணிகளை நாம் சேர்த்து வைத்திருப்போம். அவ்வாறு சேர்த்து வைத்திருக்க கூடாது. அதேபோன்று அழுக்கு துணிகளையும் நாட்கள் கணக்கில் சேர்த்து வைத்திருக்கக் கூடாது. அவ்வபோது அதனை சுத்தமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று துவைத்து துணிகளையும் அவ்வபோது மடித்து அலமாரியை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது வீடானது சுத்தமாக இருந்தால் மட்டுமே நம்மிடம் நேர்மறையான ஆற்றல்கள் உருவாகும்.
வீட்டிற்குள் நமது கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டக்கூடாது. அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் வீட்டிற்குள் நகம் வெட்டுவது தவறு என்றே கூறப்படுகிறது. அதாவது வீடு என்பதனை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வபோது பழைய பொருட்களை அகற்றி விட வேண்டும். ஏனென்றால் அந்த பழைய பொருட்களை நாம் பார்க்கும் பொழுது ஒருவிதமான எதிர்மறை ஆற்றல்கள் நம்மிடம் உருவாகும். அவ்வப்போது சுறுசுறுப்பாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து விட்டால் தரித்திரம் வந்து சேராது. மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் உருவாக்கும்.