இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Rupa

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rupa

These stores are no longer active today! Government action!

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மக்களின் மத்தியில் தொற்றானது பரவி தான் வருகிறது.இந்த தொற்று முதலில் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பரவி கொண்டே செல்கிறது.அரசாங்கமும் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.தற்போது இராண்டாம் அலையின் போது அதிகப்படியான இந்திய மக்கள் பாதிப்படைந்தனர்.மக்கள் மீண்டும் பாதிக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.அதுமட்டுமின்றி மீண்டும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அதனால் மக்கள் அதிகளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகிறது.தற்பொழுது மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடும் இடங்களில் கட்டுபாடுகளை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அந்த ஆணையின் பேரில் அனைத்து மாவட்ட ஆட்சியரும் மாவட்டங்களில் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடியுள்ளனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் எழில் கொஞ்சும் சுற்றுலா தனமான ஏற்காடு செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் போட்டுள்ளனர்.சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.மேலும் மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டுமென்றால் ஆர்டிபிசிஆர் சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே செல்ல முடியும்.

அதேபோல சேலத்திலுள்ள கொங்கணாபுரம் சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் அச்சந்தையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.அதேபோல இன்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.தற்போது மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள்,பூக்கடைகள்,சந்தைகள்,சூப்பர் மார்க்கெட்,துணிக்கடைகள்,பழம் மற்றும் காய்கறி கடைகள்,வ.உ.சி சந்தை போன்றவை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளனர்.அதேபோல நகைக்கடைகள்,சின்ன கடிவீதியில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரரை மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம்  கூறியுள்ளார்.அதேபோல இந்த கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது எனவும் கூறியுள்ளார்.