தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்!

Photo of author

By Pavithra

தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்!

இன்றைய நாகரீக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன.தற்போது அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் இருப்பதால் மீதமான உணவுகளை, ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். உணவுகளை இவ்வாறு சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து போய்விடும் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுமட்டுமின்றி உணவினை மீண்டும் மீண்டும் நாம் சூடு படுத்துவதால் அதனுடைய இயற்கை தன்மை மாறி ஃபுட் பாய்சனிங்கில் தொடங்கி புற்றுநோய்,இதயநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து உயிருக்கே உலை வைத்து விடும் என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத 8 உணவுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

1. சிக்கன்: கோழி இறைச்சியில் அளவுக்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்துள்ளது.பொதுவாகவே புரோட்டின் நிறைந்த உணவு நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது அது செரிமானமாக அதிக நேரம் ஆகும்.இந்த சிக்கனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது சிக்கனில் உள்ள புரதச்சத்து பன்மடங்கு அதிகரித்து,ஃபுட் பாய்சனை ஏற்படுத்திவிடும்.எனவே எக்காரணத்தைக் கொண்டும் சிக்கனை மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது.

2. பீட்ரூட்: பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட் சத்துக்கள் உள்ளதால் இதனை மீண்டும் சூடு படுத்தும்போது நைட்ரைட்டாக மாறி உயிருக்கே உலை வைக்கும்.

3. கீரை வகைகள்: பீட்ரூட்டை போன்ற கீரைகளிலும் அதிக அளவு நைட்ரேட் சத்துக்கள் உள்ளதால்,மிதமான கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதால் அதிலுள்ள நைட்ரேட் நைட்ரைட்டாக மாறி புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கின்றது.

4. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு.அப்படி செய்யும்போது சமைத்த உருளைக் கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன.இதன் காரணமாக உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தினால்,நச்சுத்தன்மை உள்ளதாக மாறிவிடும் வாந்தி, குமட்டல், போன்ற பல உடல் நல பாதிப்பு ஏற்படும்.

5. முட்டை: முட்டையில் அதிக புரோட்டின் நிறைந்துள்ளது.
வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தினால் அது விஷமாக மாறும்.மேலும் இது செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் வழிவகுக்கும் எனவே முட்டையை எக்காரணம் கொண்டும் ஒரு முறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிட கூடாது.

6.அரிசி சாதம்: அரிசி சாதம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஒரு உணவுப்பொருட்களில் ஒன்றாகும்.சாதத்தை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதில் நச்சு தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

7.காளான்: சைவம் சாப்பிடுபவர்களுக்கு,காளான்தான் அசைவ உணவு.காளானை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.ஆனால் காளானை சமைத்து அப்போதே சாப்பிடுவது நல்லது.இதிலும் புரோட்டின் அதிகமாக உள்ளதால், இதை இரண்டாம் முறை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறி செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

8.சமையல் எண்ணெய்: எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும் அதை திரும்பத் திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது,அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இது புற்றுநோய் இதய நோய்கள் ஏற்பட காரணமாக அமையும்.