இந்த வகை ஷாம்புகளால் முடிக்கு ஆயுசு குறைவது உறுதி!! இதனை பயன்படுத்துங்கள்!!

0
182
#image_title

இந்த வகை ஷாம்புகளால் முடிக்கு ஆயுசு குறைவது உறுதி!! இதனை பயன்படுத்துங்கள்!!

நாம் இன்றைய காலத்தில் நம் தலையை பற்றி அதிகம் கவலை கொள்கிறோம். முடி உதிர்தல், பொடுகு, முடி அடர்த்தி இல்லாமல் இருத்தல் போல பல பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த பிரச்சனைகளை தீர்க்க நாம் பல வகையான ஷாம்புகளை நம் தலைக்கு பயன்படுத்துவோம். ஆனால் அந்த ஷாம்புகள் எல்லாம் நல்ல ஷாம்புகளா இல்லை கெட்ட ஷாம்புகளா என்று தெரியாமலே நாம் நம் தலைக்கு பயன்படுத்துகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் நாம் எந்த வகையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

 

தலைகளின் நோய்களுக்கு ஏற்ப ஷாம்பு வகைகள் மாறுபடும். அதாவது தலையில் பொடுகு அதிகம் இருந்தால் அதற்கு ஒரு ஷாம்பு, தலை முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் அதற்கு ஒரு ஷாம்பு என்று இந்த பதிவில் குறைவான கெமிக்கல் உள்ள ஷாம்பு வகைகளை பற்றி பார்க்கலாம்.

 

ஷாம்புகளின் வகைகள்…

 

* நம் தலைக்கு கிளென்சிங் ஷாம்புவை பயன்படுத்தலாம். இந்த ஷாம்புவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் இருக்காது. கெமிக்கல் என்பது இதில் குறைவுதான்.

 

* பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் ஆன்டி டேன்ட்ரஃப் ஷேம்புவை பயன்படுத்தலாம். இந்த ஷாம்பு தலையில் ஏற்படும் எந்தவிதமான பிரச்சனையும் சரி செய்யும்.

 

* பூஞ்சை தொற்று பிரச்சனை உள்ளவர்கள் ஆன்டி சபோரிக் ஷாம்புவை பயன்படுத்தலாம்.

 

* தலையில் தோல் உரியும் பிரச்சனை உள்ளவர்கள், சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் கெரடோலிடிக் ஷாம்புவை பயன்படுத்தலாம்.

 

* முடியின் அடர்த்தி குறைவாக இருந்தால் வால்யூமைசிங் ஷாம்புவை பயன்படுத்தலாம். இது உங்களின் தலையில் முடி குறைவாக இருந்தாலும் அதை அடர்த்தியாக காட்டும்.

 

* வறண்ட முடி உள்ளவர்கள் மாய்சுரைஸிங் ஷாம்புவை பயன்படுத்தலாம். இது நம் தலைமுடிக்கு லேசான தன்மையை கொடுக்கும்.

 

* தலைமுடிக்கு கலர் அடித்தவர்கள், முடியை நேராக செய்ய ஹேர் ஸ்டெய்ட்னிங் செய்தவர்கள் எல்லாரும் ரீவைட்டலைசிங் ஷேம்புவை பயன்படுத்தலாம். இந்த ஷாம்புவை பயன்படுத்தும் பொழுது நம் தலைமுடிக்கு எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது.

 

* நீச்சல் குளத்திற்கு சென்று வருபவர்களுக்கு தலையில் குளோரின் படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த குளோரின் நம் கூந்தலுக்கு பல பாதிப்புகளை தரும். அவ்வாறு குளோரின் ஏற்படுத்தும் பாதிப்புகளை சரி செய்ய ஸ்விம்மர்ஸ் ஷேம்புவை தலைக்கு பயன்படுத்தினால் குளோரின் மூலம் தலைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

 

ஷாம்பு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…

 

நாம் ஷாம்பு வாங்கும் பொழுது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

 

* ஷாம்பு வாங்கும் பொழுது அதில் நாம் PH அளவை சரிபார்த்து வாங்க வேண்டும். இந்த பி.ஹெச் அளவு 5.5 அளவு இருந்தால் அது குறைவான கெமிக்கல் கொண்ட ஷாம்பு என்று அர்த்தம். மேற்கூறிய ஷாம்புகளை பயன்படுத்தும் முன்பு மருத்துவர்களை ஆலோசிக்க வேண்டும்.

 

* சில ஷாம்புகளில் பென்சாயில் எனப்படும் கெமிக்கல் இருக்கும். இந்த கெமிக்கல் தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கக் கூடியது. இந்த பென்சாயிலின் அளவு ஷாம்புவில் எந்த அளவு இருக்கிறது என்று பார்த்து வாங்க வேண்டும்.

 

* புரோட்டீன் சத்துக்கள் உள்ள ஷாம்புவை பார்த்து வாக்க வேண்டும்.

 

* சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சிக்கு விழுகும். அவர்களுக்கு என தனியாக ஷாம்பு வகைகள் உள்ளது.

 

* ஷாம்பு பாட்டில்களில் அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம், ரோஸ் பொர்ரி, சோயா பீன்ஸ் ஆகிய பொருட்களின் சத்துக்கள் கலந்த ஷாம்புகள் இருக்கும். அந்த வகையான ஷாம்புகளை பயன்படுத்தும் பொழுது நம் தலைமுடிக்கு எந்த பிரச்சனையும் வராது.