இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு!

0
114
These will no longer work! Government Order of Action!
These will no longer work! Government Order of Action!

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டு கொண்டு வர அரசாங்கம் அதிகளவு முயற்சி செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முதலில் தடுப்பூசி போட தயங்கிய நிலையிலேயே இருந்தனர்.ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது.

அந்த உயிர் சேதங்களை கண்டு மக்கள் அனைவரும் அதிகளவு அச்சமுற ஆரம்பித்துவிட்டனர்.அதனையடுத்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்து விட்டனர்.மக்கள் தடுப்பூசி போட முன் வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.ஒன்றிய அரசிடம், மாநில அரசு பலமுறை தங்களின் தேவையை பூர்த்தி செய்யும் படி தொடர்ந்து கேட்டு வருகிறது.ஆனால் ஒன்றிய அரசோ தேவையை பூர்த்தி செய்ய காலதாமதம் கடத்தியே செய்கிறது.

அந்தவகையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒன்றிய அரசின் மீது புகார் அளித்தார்.கொரோனா தடுப்பூசி வழங்குவதை தாமதம் செய்வதால் அவர் அவ்வாறு ஒன்றிய அரசை குற்றம் சாட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் வேளையில் அடுத்தகட்டமாக மூன்றாவது அலை தீவீரமாக பரவக்கூடும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.அவ்வாறு கேரளாவில் அதிகளவு கொரோனா தொற்று பரவியதால் தற்போது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடக் கூறி அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை மீறியதால் ரூ.50000 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.அதேபோல தற்போது கோவையில் மால்கள் மற்றும் பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதித்துள்ளனர்.இவற்றின் மூலம் மக்கள் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும்.நாளை மறுநாள் சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.அதில் ஊரடங்கு போட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

Previous articleஎனக்கு வாழவே பிடிக்கல!! என்னோட உயிர் தோழியை நானே கொன்னுட்டேன்!!
Next articleநிவின் பாலியின் அடுத்த அவதாரம்!! இவரும் சூரியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்!!