இந்த ராசிக் காரர்களே பயணங்களின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிக் காரர்களே பயணங்களின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Rupa

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிக் காரர்களே பயணங்களின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:
மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் வெளி பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உங்களை தேடி பணம் வந்து சேரும் நாள்.உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் அலுவலகத்தில் வீண் வம்புகள் ஏற்படும்.குடும்பத்திலும் சிறுசிறு சச்சரவுகள் நிகழும் நாள். இன்று அதிகமாக செலவுகள் காணப்படும்.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

மிதுனம்:
மிதுனம் ராசி அன்பர்களே உங்களுக்கு விருப்பம் உள்ள காரியங்களை அடைவதற்கு போராடி வெல்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை காணப்படும். உங்கள் துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பல செலவுகள் காணப்படும்.உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்:
கடகம் ராசி அன்பர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடலாம். அலுவலகத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் பயணங்களின் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படும்.

சிம்மம்:
சிம்மம் ராசி அன்பர்களே இன்று நன்மைகள் நடைபெறும் நன்னாள்.இன்று பல வெற்றிகள் குவியும்.அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.தன வரவுகள் அதிக அளவு பெருகும் நன்னாள்.உங்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். வேலை செய்யும் அலுவலகத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பதன் மூலம் சுமுகமான உறவை கையாள முடியும். பணவரவுகள் கிட்டும். இன்று உங்கள் உடல்நலம் சீராக காணப்படும்.

துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைகளால் தேவையற்ற வம்புகள் உங்களை தேடி வரும். குடும்ப பிரச்சனைகளால் உங்கள் துணையுடன் சிறு சிறு சண்டைகள் உருவாகும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். அலுவலகத்தில் அதிக அளவு பணிச்சுமை இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சகம் ராசி நண்பர்களே செய்யும் செயல்களை பொறுமையாக கையாளுவதன் மூலம் வெற்றிகள் காணமுடியும். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நற்பலனைத் தரும். உங்கள் துணையுடன் சிறிய மனஸ்தாபங்கள் காணப்படும். பணவரவுகளில் சற்று குறைந்தே இருக்கும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

தனுசு:
தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனவரவு பெருகும் நன்னாள். உங்கள் உடல்நலம் சீராக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:
மகரம் ராசி அன்பர்களே இன்று வளர்ச்சிகள் பெருகும் நன்னாள். இன்று அதிக அளவு பணிச் சுமைகள் காணப்படும். துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். பண வரவுகள் அதிகரித்து காணப்படும்.இன்று உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்:
கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களின் நான் சீராக இருக்காது.வேலை செய்யும் அலுவலகத்தில் மிகவும் கவனம் தேவை. பணவரவுகள் சற்று குறைந்தே காணப்படும் உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

மீனம்:
மீனம் ராசி அன்பர்களே நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மையாக இருந்தால் வெற்றிகளைக் காண்பீர்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகளவு வேலைகளில் முயற்சிகள் செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சனைகளால் அலுவலகத்தில் கவனம் சிதறி விட நேரிடும்.உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் சுமூகமான உறவு ஏற்படும். பணவரவுகள் சற்று குறைந்தே காணப்படும் மேலும் உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.