இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.கொடைக்கானலுக்கு மக்கள் அதிகளவு வருகை தருவார்கள்.மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செயப்படுகிறது.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பேருந்திற்கு ரூ 250, பேருந்து ரூ 150, கனரக வாகனங்கள் ரூ100, வேன் மற்றும் மினி லாரி, டிராக்டர்களுக்கு ரூ 80, சுற்றுலா மற்றும் வாடகை சிற்றுந்திற்கு ரூ 40 ஆக சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து நகராட்சி அனுமதி பெற்று விலக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து அதன் பிறகு தங்களுடைய வாகனங்களுக்கு அனுமதி வாங்கி கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.