அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

Photo of author

By Hasini

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர்.

சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த ஸ்டெபின் என்பவருடன் திங்கள் நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சுஜித்தின் செல்போனில் தொடர்புகொண்ட திங்கள் நகர் பெரியபள்ளியை சேர்ந்த சுரேஷ் என்பவர்,உங்களிடம் தனியாக பேச வேண்டுமென கூறி மேலமாங்குழி குளம் பகுதிக்கு வரும்படியும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சுஜித் – ஸ்டெபின் ஆகியோர் அங்கு சென்ற நிலையில், அங்கு நின்ற சுரேஷ், அவரது நண்பர் ராபி ஆகியோர், சுஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.அப்போது சுஜித் அவர்கள் சொன்னதை ஏற்க மறுத்ததால் சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தை சரமாரியாக குத்தினார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, இதனை தடுக்க முயன்ற ஸ்டெபினையும் அவர்கள் தாக்கி விரட்டியடித்தனர்.

இதுகுறித்து ஸ்டெபின் இரணியல் போலீசாரிடம் கூறியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜித் உடலை மீட்டு, குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், வாடிவிளை பகுதியை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுடன் சுஜித் மற்றும் சுரேஷ் ஆகியோர் கள்ளத்தொடர்பில் இருந்ததும், இதனால் ஏற்பட்ட மோதலில் அவர்கள் அடித்துக்கொண்டதும், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருக்க நினைத்து இரண்டு இளைஞர்கள் அடித்து கொண்டதின் விளைவாக நடந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் குடும்பத்தை பற்றியும், அவர்களின் எதிர்காலம் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.