Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக,பாஜக புறக்கணித்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலானது தற்பொழுது 3 வது முறையாக நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சி போட்டியிடும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக வரப்போகும் சட்டமன்ற தேர்தல் தான் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் திமுக தனது கூட்டணியான காங்கிரஸை கைவிட்டு தனது கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகுமார் அவர்களையே களம் இறக்கியுள்ளனர். இரண்டு முறை காங்கிரஸ் க்கு வாய்ப்பு கொடுத்தது போதும் என கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதன் உச்சக்கட்ட முடிவே இவரை நிர்கவைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை செய்தது குறித்து முக்கிய தகவல்கள் கோட்டை வட்டாரத்தை சுற்றி வந்தது. ஆதாவது இந்த இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் நின்றால் கட்டாயம் நாம் வெற்றி பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளது. இதனை பயன்படுத்தி வெற்றிப்பெற்று விடலாம் என எண்ணியுள்ளனர். ஆனால் திமுக களம் காண நேர்ந்தால் அதற்கு வாய்பே இல்லை. கடந்த தேர்தலிலேயே செந்தில் பாலாஜி வாக்களர்களை ஒரேடியாக அடைத்து வைத்து தங்களது வாக்கு வங்கியை ஏற்றினார்.
கூட்டணி கட்சி போட்டியிடவே இந்நிலை என்றால் என்று பலரும் பின்வாங்குவதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது தோல்வியடைந்தால் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாவும் அமைந்து விடும் என்பதால் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.