கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

Photo of author

By Hasini

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி இருந்தாலும் இத்தகைய காமுகர்களை என்னதான் செய்வது.அவர்களின் காம இச்சையை அடக்க யாரோ ஒருவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.

அசாம் மாநிலத்தில், சரைதியோ மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ம் தேதி அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்த நிலையில், தொற்றில் இருந்து விடுபட்டனர் என கூறினர்.

எனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.அசாமில் இன்னும் ஊரடங்கு தொடரும் நிலையில், அவர்களுக்கு வீட்டுக்கு செல்ல எந்த வண்டியும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையோ அவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை மறுத்து விட்டது.இந்நிலையில் அவர்களின் வீடு 25 கி.மீ. தொலைவில் உள்ளதால், அவர்கள் இருவரும் நடந்தே சென்று கொண்டு இருந்தனர்.

அதை தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்த இரண்டு மர்ம ஆசாமிகள் அவர்களை இடைமறித்தனர்.அதனால் அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அங்கிருந்து ஓடத்தொடங்கினர்.

ஆனாலும் அந்த ஆசாமிகள் அவர்களை துரத்தி தாயை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்க்கு கடத்தி சென்று அங்கே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அங்கிருந்து தப்பிய மகள், அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று கிராம வாசிகளிடம் நடந்ததை தெரிவித்து அவர்களை அழைத்து சென்று தாயை கண்டுபிடிக்க 2 மணி நேரம் ஆகி விட்டதாகவும், தெரிவித்தார்.இந்த சம்பவம் அந்த மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நோயாளிகளை கூட விட்டு வைக்காத அந்த பாவிகளை என்னதான் செய்வது.அரசு இவர்களை தண்டிக்கும் என நம்புவோம்.