Breaking News, Politics, State

விஜய்யுடன் இருந்த ரவுடிகள் குடிகாரர்கள்.. நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களை இழிவு படுத்திய தவெக!!

Photo of author

By Rupa

TVK: விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்து பெரும்வாரியாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் இவரை வொர்க் ப்ரம் ஹாம் பார்ப்பவர் இன்று கிண்டல் அடித்து வந்தனர். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாக பரந்தூர் விமான நிலைய அமைவதற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். தற்பொழுது ரமலான் பண்டிகை வருவதையொட்டி இஸ்லாமியர்கள் இப்தார் நோன்பு இருப்பது வழக்கம்.

இது ரீதியான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளப் போவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேபோல கடந்த வாரம் ஏழாம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மசூதியில் நோன்பு திறந்தார். மேற்கொண்டு அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் அரங்கம் சுற்றி கூடினர்.

இதில் அழைப்பிதழ் மூலம் பலரும் வருகை புரிந்திருந்தனர். ஆனால் அழைப்பிதழ் பெற்றவர்கள் பலரும் காத்திருக்கும் சூழல்தான் உண்டானது. மேற்கொண்டு பவுன்சர் கலாளே அங்கிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ரீதியாக தற்பொழுது தமிழ்நாடு சுன்னத் ஜமாத் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதாவது, விஜய் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி விட்டார். முறையாக நோன்பு கடைப்பிடித்து இருப்பவர்கள் மட்டுமே இப்தாரில் கலந்து கொள்ள முடியும்.

இதில் சம்பந்தமில்லாத மது அருந்தியவர்கள், ரவுடிகள் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர். பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் பண்பாட்டு நிகழ்ச்சி க்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார். மேலும் சரிவர பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் இவரை பார்க்க வந்தவர்கள் பலரும் விலங்குகளைப் போலவும் நடத்தியுள்ளனர். மேற்கொண்டு இவரால் இதுபோல சம்பவம் நடக்காமல் இருக்க இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் கடந்து தற்பொழுது விஜய் மீது புகார் அளித்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக + நாதக கூட்டணி..12 இடம் கூட கிடைக்காமல் தவிக்கும் கட்சி!! அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி!!

12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! 1 மாத இலவச கல்வியோடு ரூ.45,000 சம்பளம்.. தமிழக அரசின் புதிய திட்டம்!!