2024 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. ஒருபுறம் தேர்வர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தக்கூடிய பணி துவங்கி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதலும் கொடை விடுமுறை துவங்கி இருக்கக்கூடிய நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு துவங்கக்கூடிய தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி,
அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கக்கூடிய 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஏப்ரல் 24ஆம் தேதி உடன் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தீர்வுகள் முடிவடைவதை தொடர்ந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு ஏதுவாக ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கான இறுதி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.