DMK: திமுக அமைச்சர்களால் தொடர் இன்னல்களை அதன் தலைமை சந்தித்து வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பலமுறை எச்சரித்தும் கனிவுடனும் சொல்லி பார்த்து விட்டார். ஆனால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். அதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கட்டாயம் அமைச்சரவை மாற்றம் இருக்குமென ஸ்டாலின் நேரடியாகவே கூறியுள்ளார். அதன்படி எந்தெந்த அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்பது குறித்து உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதன்படி முதலாவது பெயரை பொன்முடி தான்.
சமீபத்தில் பெண்களை தொடர்புபடுத்தி சைவ வைணவ இனம் குறித்து அவதூறாக பேசினார். இவ்வாறாக பேசியதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனங்களை எழுப்பினர். ஏன் சொந்தக் கட்சிக்குள்ளையே இவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின் அவரது பொறுப்பை பரித்தாரே தவிர பதவியில் கை வைக்கவில்லை. ஆனால் இவரை பதவி விலகியிருக்க வேண்டுமென பலதரப்பிடமிருந்து அழுத்தம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் விதமாக பொன்முடி நடந்து கொள்வதால் அவருக்கு டம்மி பதவி கொடுக்க உள்ளதாக கூறுகின்றனர்.
இரண்டாவதாக இருப்பது பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தான். குறிப்பாக இவர் துறை சார்ந்து நடக்கும் பணியிட மாற்றம் புதிய நிர்வாகிகள் நியமிப்பு போன்றவை அதிகாரப்பூர்வமற்ற நிலையில் இவர் தலைமையில் தான் நடைபெறுகிறதாம். அதேபோல இவர்களை வைத்து தங்களுக்கு தேவையான பத்திர பதிவுகளையும் செய்து கொள்கிறார்களாம். அமைச்சர் துரைமுருகன் தற்போது சிக்கிய பொன்முடி வரிசையில் இவரும் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில், ஆண்ட பரம்பரை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி இவர் கட்சி ரீதியான தகவல்களை வேறு ஒருவரிடம் செல்போன் மூலம் பகிர்ந்த தகவல் ஸ்டாலின் மேஜைக்கு சென்றுள்ளது. அது மட்டும் வெளியே வந்தால் இவர்களது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவிடும். இதனையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இவரை மாற்ற முடிவெடுத்துள்ளனர். மூன்றாவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி. இவர் இவருடைய பதவி சார்ந்து எந்த ஒரு செயல்பாடுகளையும் கவனிப்பதில்லையாம். மாறாக தனக்குப்பின் என் மகனுக்கும் இதே போல் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென அவர் சூழ்ந்துள்ள நிர்வாகிகளிடம் கடிந்து கொள்கிறாராம்.
அதனாலேயே இவரை பதவி மாற்றம் செய்ய உள்ளார்களாம். இதை தொடர்ந்து மா சுபிரமணியம் இலக்காவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தன் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்காமல் தன்னைத்தானே விளம்பரம் படுத்துவதையே மும்மரம் காட்டு வருகிறார். தற்போது வரை கிண்டியில் இருக்கும் மருத்துவமனைக்கு போதிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. அங்கு சிகிச்சை எடுக்க வரும் நபர்களை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். தொடர்ந்து இது ரீதியாக புகாரானது வந்த வண்ணமாகவே உள்ளது.
அதனால் இவரை மாற்ற உள்ளனர். இறுதியாக பிடிஆர், இவர் இலக்கா மட்டும் மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் தனக்கு சரியான பதவி கிடைக்கவில்லை என்பதை நேரடியாகவே புலம்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன்படி இவருக்கு சரியான பொறுப்பு கொடுத்து உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மட்டும் முக்கிய பொறுப்பாளர் பதவி கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர்.