மகளிர் உரிமை தொகை “2023 செப்டம்பர்” மாதம் முதல் தமிழக மகளிருக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது, இந்த உரிமை தொகை சிலருக்கு கிடைக்கவில்லை என்று தொடக்கத்திலிருந்தே செய்திகள் வெளிவரத் தொடங்கின. தமிழக அரசு மகளிர் உரிமை தொகையை பெற சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது “2.5 லட்சத்திற்கு” அதிகமாக ஆண்டுக்கு வருமானம் பெறுபவர், “3600 யூனிட்” அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர், இதற்கு முன்பு அரசு வழங்கும் ஏதேனும் உரிமை தொகையை பெறுபவர்கள் போன்றவர்களுக்கு, இந்த உரிமை தொகை வழங்க படாது என்று அறிவிப்பு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் திமுக சார்பில் “நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா” நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” அவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர், மீனவர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கும் மற்றும் மாணவர்கள் என சுமார் “2000”கும் அதிகமான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் “திராவிட மாடல்” ஆட்சியில், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பெண்களுக்கு தேவையான திட்டங்களையும் “தமிழக முதல்வர்” அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார். “காலை உணவு திட்டம்” மூலம் சுமார் “20 லட்சம்” பள்ளி மாணவ,மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த காலை உணவு திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் சுமார் “1.16 கோடி” மகளிருக்கு , மகளிர் உரிமை தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இருப்பினும் சிலருக்கு இன்னும் உரிமை தொகை வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர்களில் தகுதியுடைய மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.