இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த ஆண்டு பல லட்சம் பேர் அரசு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்பொழுது குரூப்-2 தேர்வு நடந்து முடிந்துள்ளது. இம்முறை குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 60% பேர் இம்முறை அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசு தேர்வுகளில் ஒரு சலுகையை அளித்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1,2 2ஏ போன்ற தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.
இந்த தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இவ்வாறு இருக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகையாக இந்த தமிழ் தேர்வு கட்டாயமில்லை என்று கூறியுள்ளனர். அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி ஒன்று இரண்டு தேர்வுகளில் தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் பாடம் படித்த மாற்றுதிறனாளிகளுக்கு தமிழ்மொழி தேர்வு எழுதுவதில் அதிக அளவு சிரம படுவதால் தமிழ்மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஆங்கில மொழித்தாள் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த விளக்கானது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமின்றி மாநிலத்தில் நடத்தப்படும் மற்ற தேர்வுகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். இந்த சழுகையானது அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தாத. 40 சதவீதத்துக்கும் குறைவாக குறைபாடுகள் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பயனளிக்கும். இதனை பயன்படுத்த நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.