பெண்களுக்கு நீளமான கூந்தல் மீது எப்பொழுதும் ஒரு ஆசை இருக்கின்றது.நம் பாட்டி காலத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.நம்மைவிட நம் அம்மா பாட்டிகளுக்கு தலைமுடி அடர்தியாகவும்,நீளமாகவும் இருக்க காரணம் ஆரோக்கிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான்.
அவர்களை போன்று அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற விரும்பும் பெண்கள் இந்த ஆலோசனையை தொடர்ந்து பின்பற்றுங்கள்.தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தலாம்.
அரிசி தண்ணீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
1)வைட்டமின் பி
2)வைட்டமின் ஈ
3)தாதுக்கள்
4)கனிமங்கள்
5)ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
அரிசி ஊறவைத்த தண்ணீரை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
**தலை முடி உதிர்வு பிரச்சனை சரியாகி அடர்த்தியாக முடி வளரும்.
**தலைக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மை கிடைக்கும்.அரிசி ஊறிய நீரை தலைக்கு பயன்படுத்தினால் அதன் வலிமை அதிகரிக்கும்.
**தலைமுடி நீளமாக வளர அரிசி ஊறவைத்த தண்ணீரை தலைக்கு பயன்படுத்தலாம்.தலையில் அழுக்கு படியாமல் இருக்க அரிசி ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
அரிசி நீர் தயார் செய்வது எப்படி?
நீங்கள் பச்சரிசி,சிவப்பரிசி,பாசுமதி என்று எந்த வகை அரிசியையும் பயன்படுத்தலாம்.இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.கிண்ணம் ஒன்றில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.பின்னர் அரிசி நீரை மட்டும் வேறொரு கிண்ணத்திற்கு வடித்து ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து தலைக்கு தடவிய ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.