தமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!

Photo of author

By Pavithra

தமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!

Pavithra

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை மற்றும் முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,இதனை கண்டிக்கும் விதமாக,தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரைகுழுக்கள்,
தங்களது வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து,நாளை சஷ்டி விரதம் என்பதால்,நாளை மாலை 6.01 பூஜை செய்ய வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.இந்த பூஜையின் மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை இந்த உலகிற்கு காட்டுவோம் என்று அன்பு வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார்.

இவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீட்டில் முருகர் படத்தையும் மற்றும் முருகன் வேலையும் வைத்து சரியாக 6.1 மணிக்கு பூஜை செய்தனர்.மேலும் கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர்.சமூக வலைதளங்களில் டிரெண்டிங் வேல் பூஜை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர், வேலுடன் புகைப்படம் எடுத்தும், பூஜை செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.