என்னை முட்டாளாக பயன்படுத்தினர்!! மனம் உடையும் ஜெயம் ரவி!!

Photo of author

By Gayathri

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் கொந்தளித்தனர். பலரும் பல விதமான விமர்சனங்களையும் பலவிதமான சர்ச்சை பேச்சுகளையும் பேசிக் கொண்டிருந்தனர்.

எனினும் இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. இதற்குள் யாரும் தலையிட வேண்டாம் என்று ஜெயம் ரவி தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தான் தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய தாயார் இருவரும் தன்னை முட்டாள் போன்று நடத்தியதாக மனமுடைந்த பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி அவர்கள்.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி கூறி இருப்பதாவது :-

வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இன்று வரை கிடைத்ததில்லை என்று கூறி இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. மேலும் அவர் பேசுகையில், என்னுடைய மாமியார் என்னை வைத்து பல படங்களை தயாரித்தார். ஆனால் எந்த திரைப்படமுமே வெற்றி பெறவில்லை. அனைத்தும் எனக்கு நஷ்டத்தையே அளித்தது என்று கூறி மீண்டும் மீண்டும் என்னை முட்டாளாக்கிக் கொண்டே இருந்தார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

எனக்கென்று எந்தவித பேங்க் அக்கவுண்ட் வும் கிடையாது. எனக்கு ஏதேனும் செலவு இருந்தால் கூட அதை என்னுடைய மனைவியான ஆர்த்தியிடம் தான் கேட்க வேண்டும். 10 ரூபாய் வேண்டுமென்றால் கூட ஆர்த்தி என்னிடம் 10000 கேள்விகள் கேட்டு தான் அந்த பணத்தினை தருவார் என்று மனம் உடைந்து பேசியிருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி அவர்கள்.