கொள்ளையடிக்க வந்த திருடர்கள்!மனம் மாறி தங்கள் பணத்தை கொடுத்து சென்ற சுவாரசிய சம்பவம்

Photo of author

By Sakthi

கொள்ளையடிக்க வந்த திருடர்கள்!மனம் மாறி தங்கள் பணத்தை கொடுத்து சென்ற சுவாரசிய சம்பவம்

டெல்லியில் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் மனம் மாறி தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்துச் சென்றுள்ளனர். இந்த திருடர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும் காவல் துறையினர் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.

வழக்கமாக திருடர்கள் என்றால் பணத்தை கொள்ளையடித்து செல்வது, நகைகளை கொள்ளையடித்துச் செல்வது, கைகளில் உள்ள பொருள்களை கொள்ளையடித்துச் செல்வார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் வீட்டில் திருடர்கள் திருட வந்தால் வீட்டில் சமைத்து சாப்பிட்டு செல்வது, சிறிது நேரம் படுத்து உறங்கி செல்வது, குளித்துவிட்டு செல்வது, டிவி பார்த்துவிட்டு செல்வது என்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் சாலையில் கொள்ளையடிக்க வரும் திருடர்கள் அவ்வாறு இல்லை. நம்மிடம் என்ன இருந்தாலும் அதை கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள். நகை, பணம், செல்போன் என எதுவாக இருந்தாலும் சரி அதை பறித்துவிட்டு செல்வார்கள். ஆனால் டெல்லியில் திருடவந்த திருடரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சாலையில் தனியாக ஒரு தம்பதியினர் நடந்து சென்றுள்ளனர். அவர்களிடம் திடீரென்று எங்கிருந்தோ வந்த திருடர்கள் துப்பாக்கியை காட்டி அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கியுள்ளனர். அந்த பையை திருடர்கள் சோதித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பையில் 20 ரூபாய் மட்டும் இருந்துள்ளது. இதையடுத்து போதையில் இருந்த அந்த திருடங்கள் மனம் இறங்கி திருடர்களிடம் கருந்த 100 ரூபாயை அந்த தம்பதியினரிடம் கொடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த திருடர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பல இடங்களில் கொள்ளையடித்த இந்த திருடர்களை டெல்லி காவல்துறையினர் சிசிடிவி மூலமாக அடையாளம் அறிந்து கண்டுபிடிதுத்து கைது செய்தனர்.