வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

0
193
Thieves escape on bike with looted items in front of home owner!
Thieves escape on bike with looted items in front of home owner!

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள்.

தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை நேரத்திற்கு வீடு திரும்பலாம் என நினைத்தார்கள். அப்போது அவர் வீட்டினுள் இல்லை என்றுநோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள் திருடர்கள் . அவர் வீட்டில் இல்லை என்று தெரிந்த சில மர்ம நபர்கள் அவரது வீட்டில் வெளிப்புற கதவை உடைத்து சென்ற மர்ம நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து இரண்டு பவுன், நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம், ஒரு லட்சம் மதிப்பிலான 5 பட்டு புடவைகளை திருடி சென்றனர்.

வீடு திரும்பிய வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பார்த்தபோது வீட்டில் உள்ள பூட்டு உடைந்த நிலையில், இரு திருடர்கள்   பணம், நகை, புடவைகளுடன் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார்கள் . இதை கண்ட வெங்கடேசன் மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆத்தூர் ஊரக போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Previous articleமூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!
Next articleஅரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!