திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்!
சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தசைப்பிடிப்பு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற வீராங்கனை பிணமாகவே வெளியேறினார். மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் பிரியா உயிரிழந்துள்ளார். 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்கியுள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சி என ஆரம்பித்து பாமக என அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கண்டனம் தெரிவித்த நிலையில், போராட்டம் நடக்கும் வகையில் இதனை தூண்டிவிட்டு அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எதிர்கட்சியை கண்டிக்கும் வகையில் கூறினார். ஏன் இதர கட்சிகள் கண்டனம் தெரிவிக்க கூடாது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள சில ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு நடந்து விடுகிறது. அவ்வாறு அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது சாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் தவறுதலாக ஹெச் ஐ வி இரத்தத்தை செலுத்தி விட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், ரத்தம் கொதிக்கிறது என கூறி, ஊழல் செய்யும் இந்த அரசில் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதை தெரிவிக்க இதைவிட ஓர் உதாரணம் இருக்க முடியுமா என்று கண்டனம் தெரிவித்தார்.பின்பு அதனை எதிர்த்து பல கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் ,ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவ்வாறு பதிவிட்டு, தற்பொழுது நீங்கள் ஆட்சி செய்யும் நிலையில் மருத்துவர்களின் குறைபாட்டால் 17 வயது விளையாட்டு வீராங்கனை உயிர் நீங்கியது குறித்து உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்பொழுது தெரிகிறதா எது ஊழல் அரசு என்று? அதேபோல ஊழல் அரசு நிரூபிக்க இதைவிட ஒரு உதாரணம் இருக்குமா என்று அவரைப் போலவே இவர் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக எதிர்கட்சியாக இருந்த பொழுது ஆளும் கட்சியை எதிர்த்து எழுப்பிய கேள்விகளை வைத்தே தற்பொழுது, அவரை ரிவெஞ் செய்து வருகின்றனர். தற்பொழுது ஸ்டாலின் தொகுதியிலேயே கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழந்தது அவர்களுக்கு ஓர் அடியாகவே இருக்கும்.
திமுக சொல்லிய வசனங்களை வைத்து தற்பொழுது எதிர்க்கட்சிகள் இவர்களை அட்டாக் செய்து வருகின்றனர். இதனால் திமுக நிர்வாகிகள் எதுவும் சொல்ல முடியாமல் இருப்பதாக அரசியல் சுட்டுவல் பேசி வருகின்றனர்.