பெண்கள் தங்கள் தலைமுடியை அடர்த்தி மற்றும் நீளமாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
தேவையான பொருட்கள்:-
1)செம்பருத்தி இலைகள் – ஒரு கைப்பிடி
2)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
3)தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலை மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
செம்பருத்தி இலை மற்றும் கறிவேப்பிலை இலையில் தூசி,அழுக்கு இல்லாத அளவிற்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்க வேண்டும்.
இந்த பேஸ்டை கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை தலை முழுவதும் முடியின் மயிர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இந்த கலவை நன்கு ஊறி வந்த பிறகு சீகைக்காய் அல்லது அரப்பு பொடி கொண்டு தலையை அலசி எடுக்க வேண்டும்.
இப்படி வாரம் இரண்டு தடவை செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.இந்த ஹேர்பேக் தலை முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த ஹேர் பேக்கில் செம்பருத்தி பூ,நெல்லிக்காய் போன்றவற்றையும் விருப்பம் இருந்தால் சேர்த்து பயன்படுத்தலாம்.
உடல் சூடு இருபவர்கள் வெட்டி வேர்,வெந்தயம்,கற்றாழை போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.