ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!!

0
94

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!!

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

கடந்த ஜூலை 6ம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக சதம் அடித்த மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் இங்கிலாந்து அணியில் மார்க்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதையடுத்து 263 ரன்கள் பின்தங்கிய நிலையில்  களமிறங்கி இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 80 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதையடுத்து 26 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவியாஸ் ஹெட் அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் வோக்ஸ், பிராட் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதையடுத்து மொத்தமாக ஆஸ்திரேலிய அணி  250 ரன்கள் சேர்த்ததால் இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹேரி பிரூக் அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார். ஜேக் கிராவ்லி 44 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

 

மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் மார்க் வுட் ஆட்டநாயகன் விருதை வென்றார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

 

Previous articleகுடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!
Next articleஇனி சாலை விதிகளை  மீறினாலும் அபராத்தொகையில் தள்ளுபடி உண்டு!! மாநில அரசு  அசத்தலான அறிவிப்பு!!