தேவபுரீஸ்வரர் மதுர பாஷினி அம்மன் திருக்கல்யாணம்!

0
185

கீழ வேளூர் அருகே தேவூரில் மதுர பாஷினி அம்மன் சமேத தேவபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தில் கடந்த 20ஆம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. இதனை தொடர்ந்து இரவில் தேவபுரீஸ்வரர், மதுரபாஷினி, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோவில் கொடிமரத்தடியிலிருந்து ஏராளமான பெண்கள் பழங்கள், மஞ்சள், குங்குமம், இனிப்புகள், போன்ற பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்தார்கள். தேவபுரீஸ்வரர் சுவாமி, மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அதன் பிறகு மதுரபாஷிணி அம்மன் சன்னதியில் தேவபுரீஸ்வரர் சாமிக்கும், தேவபாஷினி அம்மனுக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்த்தக்கோடிகள் பங்கேற்று கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.

Previous articleகோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 
Next articleKanavu Palangal in Tamil : கனவு பலன்கள்