கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

0
150

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே கோயில்களை தேடிச் செல்கிறார்கள். சிலர் மட்டுமே காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறார்கள்.

கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும்பும் ஒரு குழப்பம். கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் தான்.

கோயிலுக்கு செல்லும் முன்….

பக்தர்கள் கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் கண்டிப்பாக கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.

குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கோயிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோயில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.

கோயிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோயில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும்.

இப்படி செய்வதால் நாம் கோயிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோயிலின் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செலுத்தப்படும் என்பது நம்பிக்கை.

கோயில் படிக்கட்டை தாண்டாமல், மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோயிலுக்குள் அழைத்து செல்வதாக அர்த்தம்.

அல்லது கோயிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை தாண்டித்தான் செல்ல வேண்டும். கோயில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம். எனவே நமது பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.

கோயிலில் தினந்தோறும் அர்ச்சகர்கள் கூறும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சப்தங்கள் போன்றவை கோயிலில் நிறைந்து இருக்கும். இதனால் கோயில் வாசற்படியை மிதித்து செல்லாமல் பக்தர்கள் கட்டாயமாக தாண்டித்தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
Parthipan K