PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார்.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவி கொடுத்து விட்டால் இதுவும் வாரிசு அரசியல் ஆகிவிடும் எனக் கூறி அப்பாவையே அன்புமணி எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் ராமதாஸ் இது என் கட்சி, என் உரிமை என்று நேரடியாகவே தெரிவித்தது மட்டுமின்றி தானே தலைவர் என்றும் கூறிக்கொண்டார். இப்படி இருக்கையில் சித்திரை முழு நிலவு மாநாட்டையும் வெற்றி கரமாக நடத்தி முடித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டில் சிறுபான்மை கட்சியினருக்கு அன்புமணி ஆதரவாக பேசியிருந்தார்.
இதற்கு திருமா அன்புமணியின் மனம் மாறிவிட்டது என அவரைப் பாராட்டி பேசியுள்ளார். இதற்கு முன்னதாகவே ராமதாஸ் திமுகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து வருவதாகவும் இதற்கு அன்புமணி முழு எதிர்ப்பு தெரிவிப்பதாக பல தகவல்கள் வெளியானது. ஏனென்றால் அன்புமணி வகித்து வரும் எம்பி பதவியானது கால அவகாசம் முடிவதையொட்டி மீண்டும் பாஜக கூட்டணியில் இருந்தால் மட்டுமே சீட்டு கிடைக்கும்.
இதனால் திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி வருகிறார். ஆனால் ராமதாஸ், அதிமுக பாஜக கூட்டணியே வேண்டாம் திமுகவுடன் பழைய கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கையில் திருமா அன்புமணி பேசியதற்கு பாராட்டியுள்ளது அரசியல் ரீதியாக சற்று உற்று கவனிக்க வேண்டி உள்ளது. மேலும் அன்புமணி திருமா பேச்சுக்கு பாஜக-விடம் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தவகையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் இவர்கள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியும்.